உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ராஜஸ்தான் சிமென்ட் சேலம் வந்தடைந்தது

ராஜஸ்தான் சிமென்ட் சேலம் வந்தடைந்தது

சேலம்:ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2,688 டன் வெள்ளை சிமென்ட் சேலம் செவ்வாய்பேட்டைக்கு வந்தடைந்தது. அதேபோல உரம், தானியம் ஆகியவையும் வடமாநிலங்களீல் இருந்து ரயிலில் சேலத்துக்கு கொண்டு வரப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து, 2,688 டன் வெள்ளை சிமென்ட் சரக்கு ரயில் மூலம், சேலம் செவ்வாய்ப்பேட்டைக்கு வந்தடைந்தது. அங்கிருந்து கன்டெய்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு சேலம், திருப்பூர், கோவை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய நகரங்களில் உள்ள கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.அதேபோல, 3,000 டன் உரம், தானியங்கள் வடமாநிலங்களில் இருந்து சேலம் கொண்டு வரப்படுவதாக சேலம் ரயில்வே அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ