உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டிரைவரை தாக்கிய 3 பேருக்கு காப்பு

டிரைவரை தாக்கிய 3 பேருக்கு காப்பு

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அடுத்த குள்ளப்பநாயக்கனுாரை சேர்ந்த கார் டிரைவர் சங்கர் கணேஷ், 35. இவர் கடந்த, 30 இரவு, குரால்நத்தத்தில் நண்பர்களுடன் மது அருந்தினார். அப்போது பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதில் சங்கர் கணேஷ் தாக்கப்பட்டார். சீலநாயக்கன்பட்டியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பனமரத்துப்பட்டி போலீசார் விசாரித்து கொலை முயற்சி வழக்கில், குரால்நத்தம் நவநீதன், 40, குள்ளப்பநாயக்கனுார் வெங்கடேஷ், 27, கொண்டலாம்பட்டி பிரபு, 37, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை