உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெண் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு நிலத்தை கிரயம் செய்த விவசாயிக்கு காப்பு

பெண் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு நிலத்தை கிரயம் செய்த விவசாயிக்கு காப்பு

தலைவாசல், கடனுக்கு நிலத்தை கிரயம் செய்த விவகாரத்தில் தற்கொலை செய்த பெண்ணின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். நிலத்தை கிரயம் செய்த விவசாயியை, போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வெள்ளையூரை சேர்ந்த, லட்சுமணன் மனைவி ஜெயந்தி, 42. இவருக்கு சொந்தமானதில், 2 ஏக்கர் நிலத்தை, அதே ஊரை சேர்ந்த விவசாயி நாகராஜன், 68, என்பவருக்கு கிரயம் செய்து, 21 லட்சம் ரூபாயை, ஜெயந்தி கடனாக பெற்றார். 2 மாதங்களுக்கு முன், கடனை கொடுத்துவிடுவதாக கூறி, மீண்டும் நிலத்தை கிரயம் செய்து தரும்படி, நாகராஜனிடம் ஜெயந்தி கேட்டார். அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து சேலம் எஸ்.பி., - வீரகனுார் போலீசில் ஜெயந்தி புகார் அளித்தும் பலனில்லை. சில நாட்களுக்கு முன், இருதரப்பினர் இடையே பிரச்னை எழுந்த நிலையில் கடந்த, 26ல், களைக்கொல்லி மருந்து குடித்த ஜெயந்தி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.அவரது மகள் மலர்விழி புகார்படி, வீரகனுார் போலீசார், நாகராஜன், அவரது மனைவி மணிமேகலை உள்பட, 7 பேர் மீது வழக்குப்பதிந்தனர். நேற்று பிரேத பரிசோதனைக்கு பின் ஜெயந்தி உடலை வாங்க, அவரது உறவினர்கள் மறுத்துவிட்டனர்.அப்போது ஜெயந்தி குடும்பத்தினர், 'நாகராஜன் உள்ளிட்டோரை கைது செய்யவேண்டும்' என, போலீசாரிடம் கூறினர். பின் தலைமறைவாக இருந்த நாகராஜனை, போலீசார் கைது செய்தனர்.ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் கூறுகையில், ''நாகராஜனை கைது செய்துள்ளோம். மற்றவர்களை தேடி வருகிறோம். நாளை(இன்று), உடலை வாங்கிக்கொள்வதாக உறுதியளித்துள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி