உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆற்றில் தத்தளித்த மூதாட்டி மீட்பு

ஆற்றில் தத்தளித்த மூதாட்டி மீட்பு

மேட்டூர்: காவிரியாற்றில் தத்தளித்த, 65 வயது மூதாட்டியை தீயணைப்பு குழுவினர் மீட்டனர்.மேட்டூர் அனல்மின் நிலையம் செல்லும் சாலையில், எம்.ஜி.ஆர்., பாலம் கீழ்பகுதி காவிரியாற்றில் ஒரு மூதாட்டியை தண்ணீர் இழுத்து சென்றது. அவர் கைகளை மேலே காட்டிய படியே சென்றதால், தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் நேற்று மாலை, 5:00 மணிக்கு சென்று மூதாட்டியை உயிருடன் மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மீட்கப்பட்ட மூதாட்டி மேட்டூர் கூலிலைன் பகுதியை சேர்ந்த இந்திராணி, 65, என்பது தெரியவந்தது. பின், அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ