உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆற்றில் குவிந்த குப்பையால் மூழ்கிய விநாயகர் சிலை மீட்பு

ஆற்றில் குவிந்த குப்பையால் மூழ்கிய விநாயகர் சிலை மீட்பு

வீரபாண்டி: சேலம் அருகே உத்தமசோழபுரம், திருமணிமுத்தாற்றின் கரையில், பழமை வாய்ந்த கரபுரநாதர் கோவில் உள்ளது. இதன் எதிரே ஆற்றுக்குள் பெரிய பாறையில் புடைப்பு சிற்பமாக விநாயகர் சிலை வடித்து, அதன் மீது நான்கு கால் கல் மண்டபம் எழுப்பி, 50 ஆண்டுகளுக்கு முன் வரை பக்தர்கள் வழிபட்டனர். ஆற்றில் கழிவுநீர் அதிகளவில் வர துவங்கியதால், பூலாவரி பிரிவில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததாலும், ஆற்றில் கொட்டப்பட்ட கழிவுகளாலும், பாலத்தின் நடுவே இருந்த நான்கு கால் மண்டபத்துடன் கூடிய விநாயகர் சிலை புதைந்தது.குப்பைக்கு வைத்த தீயின் வெப்பத்தை தாங்காமல், சில மாதங்களுக்கு முன் கல் மண்டபமும் உடைந்து விழுந்தது. அதன் மீதும் குப்பை கொட்டி, 15 அடி வரை கழிவு நிறைந்திருந்தன.இந்நிலையில் அப்பகுதி பக்தர்கள் ஒன்றிணைந்து, ஆற்றுக்குள் கொட்டப்பட்ட குப்பையை, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அகற்றினர். சிதிலமடைந்த கல் மண்டப துாண்களை அப்புறப்படுத்தி, விநாயகர் புடைப்பு சிற்பத்தை மீட்டுள்ளனர். அதற்கு அபிஷேகம் செய்து, வழிபாட்டுக்கும் கொண்டு வந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி