| ADDED : ஜூன் 12, 2024 06:44 AM
சேலம் : சேலம், குகை, நரசிங்கபுரம் தெருவில் பாதாள சாக்கடைக்கு குழி தோண்டி, 6 மாதங்களாகியும் பணி முடியவில்லை. அதனால் மேடு, பள்ளமான சாலையில் நடமாட முடியாமல் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் அளித்தும் பலனில்லை.இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், வக்கீல் மகேந்திரன் தலைமையில், நேற்று மதியம், 2:45 மணிக்கு, திருச்சி பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், கொண்டலாம்பட்டி மண்டல உதவி செயற்பொறியாளர் ஓபுளிசுந்தரம் பேச்சு நடத்தினார். அப்போது, ஒரு வாரத்தில் பணியை முடித்து சாலையை சீரமைத்து தருவதாக உறுதியளித்தார். அதையேற்று மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.