உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ. 11.70 லட்சத்தில் கால்வாய் பணி ஆய்வு

ரூ. 11.70 லட்சத்தில் கால்வாய் பணி ஆய்வு

சேலம்: சேலம் மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காமநாயக்கன்பட்டி, தொட்டியங்காடு கோவில் பகுதியில், 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அவர்கள் பயன்படுத்தி வந்த பாதையை, ரயில்வே துறையினர் எடுத்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டதும், எம்.எல்.ஏ., அருள், நேற்று சம்பந்தப்பட்ட பாதையை பார்வையிட்ட பின், ரயில்வே அதிகாரிகளை நேரில் சந்தித்து, பாதையை அடைக்க வேண்டாம் என வலியுறுத்தினார்.தொடர்ந்து, அந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் தொகுதி மேம்பாடு நிதி, 11.70 லட்சம் ரூபாய் மதிப்பில், காமநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் முதல் பெரியாண்டிச்சியம்மன் கோவில் வரை, நடந்து வரும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை