உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை!

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு, அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவித்தப் பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இதில் அனைத்துக் கல்வி அலுவலர்களும் சிறப்புக் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

skv srinivasankrishnaveni
மே 05, 2024 11:56

ஆமாம் மாணவர்கள் குடி போதைக்கு அடிமை ஆவோனும்


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 04, 2024 13:53

மீண்டும் குருகுலம் வேண்டும் குறைந்தது எட்டாம் வகுப்பு வரையிலாவது குருகுலம் வேண்டும் இறைவழிபாடு, நீதிபோதனை, என்னும் எழுத்தும், அளவான விளையாட்டு, ஒழுக்கம் எல்லாம் தானே வந்துவிடும்


தத்வமசி
மே 04, 2024 10:39

கூரை ஏறி கோழி ஓட்டாதவன் வானம் ஏறி வைகுண்டம் காட்டுவானா ? ஒரு வருடத்தில் கற்றல் தினங்களான இருநூற்று பத்து நாட்களில் நடைபெறாதது அதற்கு மேலும் நாற்பது நாட்களில் என்ன நடைபெறும் ? விளையாட்டு வகுப்பு, நூலக வகுப்பு, மற்றும் இன்ன பிற வகுப்புகளுக்க்ம் அனுப்புவது இல்லை திரும்ப திரும்ப பாடங்கள் நடத்தி தேர்வு தான் நடத்துவார்கள் தவிர நீட் மற்றும் ஜெஈஈ தேர்வுகளுக்கான பயிற்சியும் பள்ளிகளில் வழங்குகிறோம் என்று சில லட்சங்களையும் கட்டாய வசூல் செய்கின்றனர் ஆனால் ஆசிரியர்களுக்கு அந்த பணம் தரப்படுவதில்லை ஆசிரியர்களை கசக்கி பிழிந்து வீட்டுக்கு அனுப்புகிறார்கள் சரியான சம்பளம் கிடையாது சரியான அளவில் விடுமுறை கிடையாது கோடைகால விடுமுறையில் பள்ளி சேர்க்கைக்கு பிள்ளை பிடிக்க அனுப்பி விடுவார்கள் ஆக, பள்ளிக்கூடங்கள் வர வர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஜெயில் போல மாறிக் கொண்டிருக்கிறது


திருமலை
மே 04, 2024 10:36

பள்ளிகளில் ஒண்ணும்.பெருசா சொல்லித்தரப்படுவதில்லை. தனியாப் படிச்சு உருப்படவும் விடமாட்டார்கள். சமச்சீராய் எல்லோரும் உருப்படாமப் போகணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை