உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெள்ளைக்கல் பறிமுதல் கடத்த முயன்றவர் கைது

வெள்ளைக்கல் பறிமுதல் கடத்த முயன்றவர் கைது

சேலம், சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டியில் கனிமவளத்துறை உதவி அலுவலர் அரவிந்த் தலைமையில் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மினி லாரியில் அனுமதியின்றி வெள்ளைக்கல் கடத்த முயன்றவரை பிடித்து, மினி லாரியுடன் கன்னங்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணையில், கொண்டப்பநாயக்கன்பட்டி, சக்தி நகரை சேர்ந்த சகாதேவன் என்பதும், அனுமியின்றி வெள்ளைக்கல் கடத்த முயன்றதும் தெரிந்தது. அவரிடம், 2 டன் வெள்ளைக்கல் மினி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து சகாதேவனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை