ஆத்துார்: காதல் திருமணம் செய்த பெண் பேசிய வீடியோ தற்போது பரவி வருகிறது. அதில் போலீஸ் ஸ்டேஷன் சென்றாலும் பாதுகாப்பு இல்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனுாரை சேர்ந்தவர் ஜீவிதா, 24. இவரும், பெரியேரியை சேர்ந்த வீரமணி, 34, என்ப-வரும் காதலித்தனர். வெவ்வெறு பிரிவினர் என்பதால், ஜீவி-தாவின் பெற்றோர், எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கடந்த, 23ல், வீட்டில் இருந்து வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் ஜீவிதா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 'காதல் திருமணம் செய்ததால் என் கணவர் குடும்பத்தினரை மிரட்டி வருகின்றனர். பாதுகாப்பு கேட்டு வீரகனுார் போலீஸ் ஸ்டேஷன் சென்றபோது, அங்குள்ள, 'சிசிடிவி' கேமராக்களை அணைத்து விட்டு அடியாட்களை வரவழைத்து மிரட்டினர். என் மாமனாரை கொல்ல திட்டமிட்டுள்ளனர். என்னையும் கொலை செய்யும் எண்ணத்துடன் தொடர்ந்து மிரட்டல் விடுக்கின்றனர். எங்களுக்கு கலெக்டர், எஸ்.பி., உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.இதுகுறித்து, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் கூறியதாவது:மகளை காணவில்லை என, ஜீவிதாவின் பெற்றோர், வீரகனுார் போலீசில் புகார் செய்திருந்தனர். அதன்படி வீரமணி வீட்டுக்கு சென்று போலீசார் விசாரித்தனர். வீரமணி வீட்டுக்கு, ஜீவிதாவின் பெற்றோர் சென்றதாக தகவல் வந்தது.ஜீவிதா வெளியிட்ட வீடியோ அடிப்படையில், பெண்ணின் பெற்-றோரிடம், எந்த பிரச்னையும் செய்யக் கூடாது என எச்சரித்-துள்ளோம். போலீஸ் ஸ்டேஷனில், கேமராவை அணைத்து-விட்டு விசாரிக்கவில்லை. சிலர், போலீஸ் மீது தவறான தகவல் பரப்புகின்றனர். காதல் திருமணம் செய்த ஜோடி, அவரது குடும்-பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க, தலைவாசல், வீரகனுார் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.