உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓடும் பஸ்சில் 25 பவுன் திருட்டு

ஓடும் பஸ்சில் 25 பவுன் திருட்டு

சேலம்;தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்தவர் லிட்டிய ஜெயா பெரேரா, 27. இவரது கணவர் அல்பன் அமல்ராஜ். இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த ஏப்., 28ல் லிட்டிய ஜெயா பெரேரா, சொந்த ஊர் திருவிழாவில் பங்கேற்க ஓசூரில் இருந்து தஞ்சாவூருக்கு அரசு பஸ்சில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, 2 பைகளை வைத்திருந்தார். ஆனால் சேலம் வந்தபோது ஒரு பை இல்லை. அதில், 25 பவுன், வெள்ளி பொருட்கள், பள்ளி, கல்லுாரி ஆவணங்கள் இருந்த நிலையில் மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக, அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ