உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருவிழாவில் இரு தரப்பினர் மோதல் பெட்ரோல் குண்டு வீச்சால் பதற்றம்

திருவிழாவில் இரு தரப்பினர் மோதல் பெட்ரோல் குண்டு வீச்சால் பதற்றம்

ஓமலுார்:சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா நடக்கிறது. அங்கு நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, ஒரு பிரிவை சேர்ந்த சிலர், கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய குவிந்தனர். கோவில் நிர்வாகிகள் மறுத்தனர். இதனால் பதற்றம் உருவானது.போலீசார் நடத்திய பேச்சில் சமாதானம் ஏற்படவில்லை. தொடர்ந்து இரு தரப்பிலும் இளைஞர்கள், பெண்கள் திரண்டனர். நிலைமையை கட்டுப்படுத்த, தாசில்தார் தலைமையில் பேச்சு நடத்தப்படும் என தெரிவித்து, தீவட்டிப்பட்டி போலீசார், பண்டிகையை நிறுத்தினர். தொடர்ந்து கோவிலை பூட்டி அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீவட்டிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஹோட்டலில் சிலர் சாப்பிட வந்தனர். கோவிலில் இருந்தவர்களும் அங்கு குவிந்தனர். வாக்குவாதம் முற்றி, ஒருவருக்கு ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். தீவட்டிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே உள்ள பழக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் தீப்பிடித்தது. இதில், அதன் அருகே இருந்த நகைக்கடையிலும் தீப்பற்றியது. காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். கலவரக்காரர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை