உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டி.என்.பி.எல்., 8வது சீசன் ஜூலை 5ல் தொடக்கம்

டி.என்.பி.எல்., 8வது சீசன் ஜூலை 5ல் தொடக்கம்

சேலம் : சேலத்தில் ஜூலை, 5ல் டி.என்.பி.எல்., 8வது சீசன் போட்டிகள் தொடங்க உள்ளன.இதுகுறித்து சேலத்தில் டி.என்.பி.எல்., சேர்மன் பிரசன்ன கண்ணன் கூறியதாவது: தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின், 8வது சீஸன், ஜூலை, 5ல் சேலத்தில் தொடங்கி, ஆக., 4ல், சென்னை, சேப்பாக்கத்தில் இறுதிப்போட்டியுடன் நிறைவடையும். இத்தொடரில், 8 அணிகள் பங்கேற்க உள்ளன.சேலத்தில் ஜூலை, 5 முதல், 11 வரை; கோவையில், 13 முதல், 18; திருநெல்வேலியில், 20 முதல், 24; திண்டுக்கல்லில் ஜூலை, 26 முதல், 28 வரை போட்டிகள் நடக்க உள்ளன. 'குவாலிபையர்' 2 போட்டி, ஆக., 2, இறுதிப்போட்டி ஆக., 4ல் சென்னையில் நடக்கும். இப்போட்டிகள், 'ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ்' சேனலில் ஒளிபரப்பப்படும். சேலம், கோவையில் நடக்கும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை, PAYTM INSIDER தளத்தில் ஜூன், 20 முதல் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.தமிழக கிரிக்கெட் சங்க உதவி செயலர் பாபா, சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் இயக்குனர் செல்வமணி உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ