உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 25 வி.ஏ.ஓ.,க்கள் பணியிட மாற்றம்

25 வி.ஏ.ஓ.,க்கள் பணியிட மாற்றம்

சங்ககிரி: சங்ககிரி ஆர்.டி.ஓ., லோகநாயகி, சங்ககிரி தாலுகாவில் உள்ள 'ஏ' பிரிவு கிராமங்களில் ஓராண்டு பணி நிறைவு செய்தவர்கள், 'பி' பிரிவு கிராமங்களில் மூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்த-வர்கள் என, 25 வி.ஏ.ஓ.,க்களை பணியிட மாற்றம் செய்து உத்தர-விட்டுள்ளார்.மோரூர் பீட்-2 வி.ஏ.ஓ., மோகன், சங்ககிரிக்கும், சங்ககிரியில் பணியாற்றிய பிரதீப்குமார் காவேரிப்பட்டி, ஒலக்கசின்னானுார் முருகன் சின்னாகவுண்டனுாருக்கும், சின்னாகவுண்டனுார் முனி-யப்பன் கஸ்துாரிப்பட்டி, கூடலுார் ராஜ்குமார் எர்ணாபுரத்திற்கும், எர்ணாபுரம் ஜெயகுமார் வைகுந்தம், வைகுந்தம் மணி அ.தாழையூருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தெப்பகுட்டையில் பணியாற்றிய முருகன், இடங்கணசாலை பீட்-2க்கும், இடங்கணசாலை பீட்-2 குமாரசாமி கூடலுார், காவேரிப்பட்டி அக்ரஹாரத்தில் பணியாற்றிய கமலகண்ணன் அர-சிராமணி பீட்-2க்கும், அரசிராமணி பீட் -2 தமிழ்முருகன் கோனேரிப்பட்டி அக்ரஹாரத்திற்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் கிராமத்தில் பணியாற்றிய கருப்பண்ணன் தேவூருக்கும், தேவூரில் பணியாற்றிய அருள்மு-ருகன் புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரத்திற்கும், ஏகாபுரம் ராமச்-சந்திரன் இடங்கணசாலை பீட்-1 க்கும், இடங்கணசாலை பீட் -1ல் பணியாற்றிய சங்கரஹரன் மோரூர் பீட் -2க்கும், காவேரிப்-பட்டி செந்தில்குமார் அரசிராமணி பீட் -1 க்கும், அரசிராமணி பிட் -1 மலர் இடைப்பாடி தாலுகா, நெடுங்குளம் கிராமத்திற்கும் மாற்றப்பட்டு உள்ளார்கள். இ.புதுப்பாளையம் ஜெயந்தி சன்னியாசிப்பட்டி அக்ரஹாரத்-திற்கும், சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம் ராஜாத்தி ஒலக்கசின்-னானுாருக்கும், கஸ்துாரிப்பட்டி கலைவாணி மஞ்சக்கல்பட்-டிக்கும், கனககிரி பூபதி கெடிகாவலுக்கும், ஊத்துப்பாளையம் ராஜூ இ.புதுப்பாளையத்திற்கும், கோனேரிப்பட்டி அக்ரஹாரம் சிதம்பரம் கனககிரிக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ