உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மர்ம விலங்கால் மக்கள் அச்சம் விரைவில் பிடிக்க வலியுறுத்தல்

மர்ம விலங்கால் மக்கள் அச்சம் விரைவில் பிடிக்க வலியுறுத்தல்

இடைப்பாடி:மர்ம விலங்கு நடமாட்டத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுவதால் விரைவாக பிடிக்க வலியுறுத்தி உள்ளனர்.சேலம் மாவட்டம் இடைப்பாடி தாலுகா ஆனைப்பள்ளத்தில், கடந்த மாதம், 6 இரவு, விவசாயி வீரப்பனுக்கு சொந்தமான ஆட்டை, மர்ம விலங்கு கடித்து கொன்றது. அதேபோல் நேற்று முன்தினம் கோம்பைக்காட்டில் மாதையன் என்பவருக்கு சொந்தமான மாட்டை, மர்ம விலங்கு கடித்து கொன்றது. இதனால் மேட்டூர் வனச்சரகர் ஜீவானந்தம் உள்ளிட்ட வனத்துறையினர் ஆய்வு செய்து நேற்று முன்தினம் கோம்பைக்காட்டில், 13 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். நேற்று அப்பகுதியில் இடைப்பாடி தாசில்தார் வைத்தியலிங்கம் ஆய்வு செய்தார்.ஆனால் மர்ம விலங்கு சிறுத்தை எனக்கூறி, அப்பகுதி கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். குறிப்பாக மாலை, 6:00 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். வனப்பகுதி நிறைந்த கிராமப்புறம் என்பதால் இயற்கை உபாதை கழிக்க பெரும்பாலோர் வீடுகளில் கழிப்பிட வசதி கூட இல்லை. இதனால் இரவில் இயற்கை உபாதைக்கு கூட வீட்டை விட்டு வெளியே வர, பக்கநாடு, ஆடையூர், ஆனைப்பள்ளம், செங்குட்டப்பட்டி, புளியம்பட்டி, கோம்பைக்காடு, மதுரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். அதனால் கூண்டு வைத்து விரைவாக சிறுத்தையை பிடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை