உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின்சாரம் பாய்ந்து ஒயர்மேன் சாவு

மின்சாரம் பாய்ந்து ஒயர்மேன் சாவு

வாழப்பாடி : வாழப்பாடியை சேர்ந்தவர் சின்னதுரை, 57. மின்-வாரியத்தில் ஒயர்மேனாக பணிபுரிந்தார். நேற்று மாலை, 4:30 மணிக்கு, வாழப்பாடி, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள மின்மாற்றியில் பழுதுபார்ப்பு பணி மேற்கொண்டார்.அப்போது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்-பட்டார். மின்வாரிய அதிகாரிகள் சென்று பார்த்த-போது, அவர் உடல் கருகி இறந்தது தெரியவந்-தது. அவரது உடலை கைப்பற்றி, வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறு-கையில், 'முறையாக மின்சாரத்தை துண்டிக்-காமல் மின்மாற்றியில் பழுதுபார்ப்பு பணி மேற்-கொள்ள சின்னதுரை முயன்றார். இதில் மின்-சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்தது விசார-ணையில் தெரியவந்துள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை