உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பஸ் படிக்கட்டில் தவறி விழுந்து தொழிலாளி பலி

பஸ் படிக்கட்டில் தவறி விழுந்து தொழிலாளி பலி

ஆத்துார்: ஆத்துார் அருகே, புங்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் காந்தி, 36, கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, வீரகனுார் செல்லும் டவுன் பஸ்சில் ஏறினார். 11:30 மணியளவில் வளையமாதேவி பிரிவு சாலையில் சென்றபோது, பஸ்சில் இருந்த காந்தி, படிக்கட்டு வழியாக தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார், அரசு பஸ் டிரைவர் சிவக்குமார், 47, மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ