உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கான்கிரீட் வீடுகள் கட்ட 10 பயனாளிகள் சம்மதம்

கான்கிரீட் வீடுகள் கட்ட 10 பயனாளிகள் சம்மதம்

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 20 ஊராட்சிகள் உள்ளன. அதில் குடிசை வீடுகளை, கான்கிரீட் வீடுகளாக மாற்ற, கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில், 3.50 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்கு ஊராட்சி தலைவர், செயலர், ஒன்றிய பொறியாளர், மண்டல துணை பி.டி.ஓ., ஒன்றிய பணி மேற்பார்வையாளர், வார்டு உறுப்பினர் அடங்கிய குழுவினர், பயனாளிகளை தேர்வு செய்கின்றனர். ஒன்றிய கமிஷனர், பி.டி.ஓ., ஆகியோர் பயனாளிகள் பட்டியலை இறுதி செய்கின்றனர். அதன்படி பனமரத்துப்பட்டியில் பட்டா நிலத்தில், 17 குடிசை வீடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.நேற்று பனமரத்துப்பட்டி கமிஷனர் கார்த்திக், நெய்க்காரப்பட்டி, பாரப்பட்டி, திப்பம்பட்டி, தும்பல்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியலை சரிபார்த்தார். இத்திட்டம் குறித்து பயனாளிகளுக்கு விளக்கினார். 10 பயனாளிகள், கான்கிரீட் வீடு கட்ட ஒப்புக்கொண்டனர். மற்றவர்களையும் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொள்ள சம்மதிக்க வைக்க, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ