உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பட்டப்பகலில் மூதாட்டியிடம் 10 பவுன் தாலிக்கொடி பறிப்பு

பட்டப்பகலில் மூதாட்டியிடம் 10 பவுன் தாலிக்கொடி பறிப்பு

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த, அங்கமுத்து மனைவி கமலம், 62. நேற்று மதியம், 2:30 மணிக்கு, வாழப்பாடி நீதிமன்றம் அருகே புதிதாக கட்டப்படும் வீட்டை பார்க்க நடந்து சென்றார். தொடர்ந்து அதன் அருகே உள்ள கமலம் வீடு முன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.அப்போது ஒரு காரில், 4 பேர் வந்தனர். அதில் ஒருவர் இறங்கி, குடிக்க தண்ணீர் கேட்டார். பின் மயக்கமாக இருப்பதாக கூறி, சர்க்கரை கேட்டுள்ளார். கவுசல்யா எடுக்க, வீட்டுக்குள் சென்றபோது, கமலம் அணிந்திருந்த, 10.5 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு, மர்ம நபர் காரில் ஏற, அனைவரும் தப்பினர். கமலம் கூச்சலிட்டும் பலனில்லை. அவர் புகார்படி, வாழப்பாடி போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை