ஊராட்சி ஆபீசை முற்றுகையிட்ட 100 நாள் வேலை திட்ட பெண்கள்
மகுடஞ்சாவடி :மகுடஞ்சாவடி, கூடலுார் ஊராட்சியில், 1,000-க்கு மேற்பட்டோர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, பணித்தள பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த, 3 பேருக்கு மாற்றாக, தற்போது, 3 பேர் நியமிக்கப்பட்டனர். இதனால் நேற்று புதிதாக நியமிக்கப்பட்ட பணித்தள பொறுப்பாளர்களுக்கும், ஏற்கனவே பணியாற்றிய பொறுப்பாளருக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மதியம், 3:00 மணிக்கு, 100 நாள் வேலை திட்ட பெண்கள், கூடலுார் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, புது பணித்தள பொறுப்பாளர்களே பணியில் நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பின் மண்டல துணை பி.டி.ஓ., சின்னசாமி, பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதால் பெண்கள் கலைந்து சென்றனர்.