இளம்பிள்ளை ஏரியில் 1,000 பனை விதை நடல்
வீரபாண்டி: தமிழக அரசு, தன்னார்வ அமைப்புகள் இணைந்து காவிரி கரையோரங்கள், நீர்நிலை கரைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டத்தை மேற்கொள்கிறது. அதில் இளம்பிள்ளை ஏரிக்கரை, வளம் மீட்பு பூங்காவில், 1,000 பனை விதைகள் நடும் பணியை, டவுன் பஞ்சாயத்து தலைவி நந்தினி நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து செயல் அலுவலர் பிரகாஷ், துணைத்தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட கவுன்சிலர்கள், துய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள், பனை விதைகளை நட்டனர்.