உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குத்தகை செலுத்தாததால் 12 கடைகளுக்கு சீல்

குத்தகை செலுத்தாததால் 12 கடைகளுக்கு சீல்

ஏற்காடு : ஏற்காட்டில் ஒண்டிக்கடை, அண்ணா பூங்கா சாலையோரம், உள்ளூரை சேர்ந்த பலர், கடைகள் வைத்து நடத்தினர். அவர்களுக்கு ஒன்றிய நிர்வாகம் மூலம் ஒண்டிக்கடை, சந்தைப்பேட்டையில், 48 கடைகள் கட்டி, ஏலம் மூலம் குத்தகைக்கு விடப்பட்டன. அவர்கள், குத்தகை தொகையை ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தி வந்தனர். இந்த ஆண்டு வாடகையை செலுத்த, 3 மாதங்களுக்கு முன், 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. ஆனால், 19 வியாபாரிகள் பணம் செலுத்தவில்லை.இதனால் நேற்று, ஏற்காடு ஒன்றிய கமிஷனர் முருகேசன் தலைமையில் பணியாளர்கள், வாடகை செலுத்தாத கடைகளுக்கு, 'சீல்' வைக்க முயன்றனர். அப்போது சில வியாபாரிகள், பணம் கட்டி விடுவதாக கூறினர். அதன்படி, 6 பேர் குத்தகை பணத்தை கட்டினர். இதையடுத்து மீதி, 12 கடைகளை பூட்டி, ஒன்றிய நிர்வாகத்தினர், 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி