உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வட்ட எழுத்தில் 1,330 குறளால் வள்ளுவர் ஓவியம்; தொடர்ந்து 15 மணி நேரம் வரைந்து மாணவி அசத்தல்

வட்ட எழுத்தில் 1,330 குறளால் வள்ளுவர் ஓவியம்; தொடர்ந்து 15 மணி நேரம் வரைந்து மாணவி அசத்தல்

ஓமலுார் : கி.பி., 3ம் நுாற்றாண்டில் வழக்கத்தில் இருந்த, வட்ட எழுத்துகள் மூலம், 1,330 திருக்குறளை எழுதி அதன்மூலம் திருவள்ளுவர் ஓவியத்தை, 15 மணி நேரம் தொடர்ந்து வரைந்து அரசு மாதிரி பள்ளி மாணவி அசத்தினார்.சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே சிந்தாமணியூரை சேர்ந்த நெசவு தொழிலாளி நாகராஜ். இவரது மனைவி உமா. இவர்களது மகள் கீர்த்திமாலினி, 16. இவர் ஓமலுார் அருகே குப்பூரில் உள்ள சேலம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். தமிழ் பாடத்தில் ஆர்வமுள்ள இவர், 10ம் வகுப்பு தேர்வுக்கு பின் விடுமுறை நாட்களில், கி.பி., 3ம் நுாற்றாண்டில் வழக்கத்தில் இருந்த, 'வட்ட' எழுத்துகளை எழுத பழகினார். குறிப்பாக திருக்குறளை எழுதத்தொடங்கினார்.பின் பள்ளி தமிழ் ஆசிரியர் மைதிலி உதவியுடன் வட்ட எழுத்துகளில், 1,330 திருக்குறளை எழுதி, அதன் மூலம் திருவள்ளுவர் ஓவியம் வரைய பயிற்சி எடுத்தார். அவரது ஆர்வத்தை ஊக்கப்படுத்த, தலைமை ஆசிரியர் பாலமுருகன் அறிவுரைப்படி, 'ஆல் இந்தியா புக் ஆப் ரெக்காட்ஸ்' மூலம் சாதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது. இதற்கு, 'ஆல் இந்தியா புக் ஆப் ரெக்காட்ஸ்' நடுவர் பாரதிராஜா முன்னிலையில், பள்ளி யில் நேற்று காலை, 6:00 மணி முதல், கீர்த்திமாலினி வரையத்தொடங்கினார். சக மாணவ, மாணவியர், வரிசையாக வந்து பார்த்து ஊக்கப்படுத்தினர். தொடர்ந்து இரவு, 9:01 மணி வரை என, 15 மணி நேரம், 1 நிமிடத்தில் வரைந்து முடித்தார். இது ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது.இதுகுறித்து பாரதிராஜா கூறுகையில், ''மாணவி வட்ட எழுத்தில் எழுதிய திருக்குறள் சரிபார்க்கப்பட்டு பின் சாதனைக்கு சான்றிதழ் வழங்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை