உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எஸ்.எஸ்.வி., கல்வி நிறுவனத்தில் 13ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

எஸ்.எஸ்.வி., கல்வி நிறுவனத்தில் 13ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

மேட்டூர்: மேச்சேரி, குட்டப்பட்டி, எஸ்.எஸ்.வி., கல்வி நிறுவனத்தில், 13வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. சி.பி.எஸ்.சி., பொறுப்பாளர் மணிமேகலை வரவேற்றார். கல்வி நிறுவன தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.கல்வி நிறுவன தாளாளர் செல்வம், துணைத்தலைவர் வாசு, பொருளாளர் வேலுசாமி, இயக்குனர்கள் சண்முகம், ரங்கநாதன், பெருமாள், வெங்கடாசலம், யுவராஜ், ஜெயகுமார் முன்னிலை வகித்தனர். பேராசியர் பர்வீன் சுல்தானா, 'நல்லாசிரியர்' விருது பெற்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மேட்டூர் டி.எஸ்.பி., மரியமுத்து, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ், 1, பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். பள்ளி முதல்வர் கவிதா ராஜேந்திரன், துணை முதல்வர் தாமரைசெல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை