சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 15,075 பேர் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர(எஸ்.ஐ.ஆர்.,) கணக்கெடுப்பு பணி கடந்த நவ., 4ல் தொடங்கப்-பட்டது. தொடர்ந்து, 2026 வரைவு வாக்காளர் பட்-டியல், கடந்த, 19ல் வெளியிடப்பட்டு, அன்று முதல், ஜன., 18 வரை சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்படுகிறது. அதை செம்மைப்படுத்த, சிறப்பு முதல் முகாம் நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தின், 11 சட்டசபை தொகுதிகளில், 1,346 மையங்களுக்கு உட்-பட்ட, 3,468 ஓட்டுச்சாவடிகளில், காலை, 9:30 முதல், மாலை, 5:30 மணி வரை முகாம் நடந்தது. அதில், 2026 ஜன., 1ஐ தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தி அடைவோர், பெயர் விடுபட்டவர், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கலாம். பெயர் சேர்க்க படிவம் 6, நீக்க படிவம் 7, குடியி-ருப்பு மாற்றம், திருத்தம், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுதல், மாற்-றுத்திறனாளி என குறிப்பிட படிவம் 8ஐ பயன்ப-டுத்தலாம்.அதன்படி பெயர் சேர்க்க, 15,075 பேர் விண்ணப்-பித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக, சேலம் வடக்கு தொகுதியில், 1,870 மனுக்கள் வரப்பெற்-றுள்ளன. பெயர் நீக்க, 312 பேர், குடியிருப்பு, திருத்தம் உள்ளிட்ட மாற்றம் உள்ளிட்டவை கேட்டு, 5,487 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன்-படி மொத்தம், 20,874 மனுக்கள் வரப்பெற்றுள்ளன.சட்டசபை தொகுதி வாரியாக பெறப்பட்ட மொத்த மனுக்கள் விபரம் வருமாறு(அடைப்பில் பெயர் சேர்ப்பதற்கான மனு எண்ணிக்கை): கெங்கவல்லி(தனி) 1,572(1,145); ஆத்துார்(தனி) 2,029(1,409); ஏற்காடு(தனி) 1,468 (1,111); ஓமலுார் 1,601(1,096); மேட்டூர் 2,382(1,610); இடைப்பாடி 2,275(1,466); சங்ககிரி 1,524(1,142); சேலம் மேற்கு 1,439(1,153); சேலம் வடக்கு 2,475(1,870); சேலம் தெற்கு 1,880(1,520); வீர-பாண்டி 2,229(1,553).