உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நடப்பாண்டு இதுவரை 161 மி.மீ., மழை பதிவு

நடப்பாண்டு இதுவரை 161 மி.மீ., மழை பதிவு

சேலம் : சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை, 161.47 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.சேலம் மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த, 2010 முதல், நடப்பாண்டில் நேற்று முன்தினம் வரை, மாவட்டத்தில் பெய்த சராசரி மழை அளவு நிலவரம், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2010 - 720.04 மி.மீ., 2011 - 655.01; 2012 - 487.39; 2013 - 741.95; 2014 - 801.48; 2015 - 1,133.86; 2016 - 521.85; 2017 - 196.12; 2018 - 562.11; 2019 - 975.4; 2020 - 1,068.23; 2021 - 1,294.02; 2022 - 1,136.06; 2023 - 845.50 மி.மீ., என பதிவாகியுள்ளது.நடப்பாண்டில் ஜனவரி முதல் நேற்று முன்தினம் வரை, 5 மாதங்களில், 161.47 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சம், 2021ல், 1,294.02 மி.மீ., குறைந்தபட்சம், 2017ல், 196.12 மி.மீ., பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ