உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மனநிலை பாதிக்கப்பட்ட 2 முதியவர் மாயம்

மனநிலை பாதிக்கப்பட்ட 2 முதியவர் மாயம்

தலைவாசல், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வம், 52. சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். கடந்த ஜூலை, 29ல், வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி உமாமகேஸ்வரி, நேற்று அளித்த புகார்படி தலைவாசல் போலீசார் தேடுகின்றனர்.அதேபோல் மேட்டூர், சேலம் கேம்ப், தொட்டில்பட்டியை சேர்ந்த ஆனந்த ராஜ் மனைவி நந்தினி, 29. இவர்களது மகன்கள் ஹர்சத், நிதர்ஷன். அருகிலுள்ள போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்யும் நந்தினி, தொட்டில்பட்டியில் வீடு கட்டி வருகிறார். அங்கு நந்தினியின் தாத்தாவான, சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நீலகண்டன், 65, உள்ளார். அவர் தினமும் மாலை, பள்ளி முடிந்ததும் பேத்தி யின் குழந்தைகளை, வீட்டுக்கு அழைத்து வருவார். கடந்த, 29 மாலை, குழந்தைகளை அழைத்து வர, பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் தாத்தாவை கண்டுபிடித்து தரக்கோரி நேற்று நந்தினி புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !