மர்ம விலங்கு கடித்து 2 ஆடுகள் பலி
தாரமங்கலம், தாரமங்கலம், தெசவிளக்கு வடக்கு ஊராட்சி கரட்டுக்காட்டை சேர்ந்தவர் சேட்டு. விவசாயம் செய்வதோடு, ஆடுகளை வளர்க்கிறார். நேற்று முன்தினம் இரவு, ஆடுகளை வீட்டின் முன் கட்டியிருந்தார். நேற்று அதிகாலை, வீட்டின் வெளியே வந்தபோது, இரு ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவர் தகவல்படி, மாட்டையாம்பட்டி கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்து, ஓநாய், செந்நாய் வகை விலங்கு கடித்திருக்கலாம் என தெரிவித்தார்.