நாய்கள் கடித்து 2 ஆடுகள் சாவு
மேட்டூர்: மேட்டூர், வீரக்கல்புதுார் டவுன் பஞ்சாயத்து, குருவாக்காட்டை சேர்ந்த விவசாயி ரமேஷ், 37. இவரது மனைவி கோகுலபிரியா, 24. இவர்கள், செம்மறி ஆடுகளை வளர்க்கின்றனர். நேற்று முன்-தினம் ஆடுகளை பட்டியில் அடைத்திருந்தனர். நேற்று காலை பார்த்தபோது, 2 ஆடுகள், நாய்கள் கடித்ததில் இறந்து கிடந்தது தெரியவந்தது. ஏற்கனவே அப்பகுதியில் சில கோழிகளை நாய்கள் கொன்றுள்ளன. அதனால் நாய்கள் அட்டகாசத்தை தடுக்க, மக்கள் வலியுறுத்தினர்.