உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் பெண் பலி டிரைவருக்கு 2 ஆண்டு

விபத்தில் பெண் பலி டிரைவருக்கு 2 ஆண்டு

இடைப்பாடி: இடைப்பாடி அருகே தேவூர், கேட்டுக்கடையை சேர்ந்த, கூலித்தொழிலாளி மாரியப்பன், 46. கடந்த, 2019 ஜன., 22ல், டி.வி.எஸ்., 50 மொபட்டில், மனைவி செல்வியுடன் இடைப்பாடியில் இருந்து தேவூருக்கு சென்று கொண்டிருந்தார். செட்டிப்பட்டி சந்தைப்பேட்டை அருகே சென்றபோது, இருப்பாளி, மேல் அக்கரைப்பட்டியை சேர்ந்த, டிரைவர் அழகேசன், 38, ஓட்டி வந்த சரக்கு வேன், மொபட் மீது மோதியதில், செல்வி சம்பவ இடத்தில் பலியானார். மாரியப்பன் புகார்படி, தேவூர் போலீசார் வழக்குப்பதிந்தனர். சங்ககிரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அதில் டிரைவர் அழகேசனுக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி பாபு நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை