| ADDED : ஜூன் 25, 2024 01:56 AM
சேலம்: ஆசிரியையிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேருக்கு, தலா 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சேலம் கருப்பூர் அருகில் உள்ள வெள்ளாளப்பட்டி, கலுங்கு காடு பகுதியில் வசிப்பவர் மாதவன் மனைவி தமிழ்செல்வி, ஆசிரியை. கடந்த, 2016 மாலையில் பணி முடிந்து, வீட்டுக்கு செல்வதற்காக, நாலுகால்பாலம் சில்லாக்கரடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். பின்னால், பைக்கில் வந்த இரண்டு பேர், இவரது கழுத்திலிருந்த, 5 பவுன் செயினை பறித்து கொண்டு, தப்பியோடினர். இதுகுறித்து சேலம் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொண்டலாம்பட்டி செட்டிக்காடு பகுதியை சேர்ந்த சோமசுந்தரம், 32, பெரியபுத்துார் பகுதியை சேர்ந்த லோகேஷ், 30, ஆகியோரை கைது செய்தனர்.இவ்வழக்கு சேலம் ஜே.எம்.எண்-2 நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், சோமசுந்தரம், லோகேஷ் ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் தினேஷ்குமரன் தீர்ப்பளித்தார்.