22, 23, 24ல் பேச்சுப்போட்டி மாணவர்களுக்கு அழைப்பு
சேலம்: சேலம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அண்ணாதுரை, ஈ.வெ.ரா., காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகள் முறையே வரும், 22, 23, 24ல், சேலம், கோரிமேடு அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் காலை, 9:00 மணி முதல் நடக்கிறது.இதில் வெற்றிபெறும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் முறையே, 5,000, 3,000, 2,000 ரூபாயுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். தவிர பள்ளி மாணவர் இருவருக்கு சிறப்பு பரிசாக தலா, 2,000 ரூபாயுடன் பாராட்டு சான்றிதழ் கிடைக்கும். பள்ளி சார்பில் பங்கேற்போர், தலைமை ஆசிரியரிடமிருந்தும், கல்லுாரி சார்பில் வருவோர் முதல்வரிடமிருந்தும் பரிந்துரை கடிதம் பெற்று குறிப்பிட்ட நாளில் போட்டியில் பங்கேற்கலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.