31 ஆம்னி பஸ் மீது வழக்கு ரூ.50,500 அபராதம் விதிப்பு
சேலம்: தீபாவளியை முன்னிட்டு, ஆம்னி பஸ்களில் நடக்கும் கட்டண கொள்ளையை தடுக்க, சேலம் சரகத்தில், 8 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொப்பூர், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு, 8:00 முதல் நேற்று காலை, 8:00 மணி வரை வரை நடந்த சோதனையில், 31 ஆம்னி பஸ்கள் மீது வழக்குப்பதிந்து, 50,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 10,000 ரூபாய் உடனே வசூலிக்-கப்பட்டது. மேலும், 89,210 ரூபாய் சாலை வரி வசூலானதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.