உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போதைக்கு வலி நிவாரண மாத்திரை மெடிக்கல் ரெப் உள்பட 4 பேர் கைது

போதைக்கு வலி நிவாரண மாத்திரை மெடிக்கல் ரெப் உள்பட 4 பேர் கைது

சேலம், சேலம், 4 ரோடு, அன்னதானப்பட்டி, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள், மூட்டை துாக்கும் தொழிலாளர்கள், 'போதை'க்கு வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துவதாகவும், அவை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும், செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 4 ரோட்டில் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு நின்றிருந்த, 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் சேலம், பெரியார் நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 22, தட்சணாமூர்த்தி, வீரபாண்டி, ராஜவீதியை சேர்ந்த அர்ஜூனன், 26, என்பதும், அவர்கள் வலி நிவாரண மாத்திரையை வாங்கி அதிக விலைக்கு விற்பதும் தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்கியதாக, சாமிநாதபுரத்தை சேர்ந்த, 'மெடிக்கல் ரெப்' சுப்ரமணி, 55, என்பவரையும் கைது செய்தனர். 300 மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். இந்த மாத்திரைகளை, ஊசி போடுவதற்கான தண்ணீருடன் கலந்து உடலில் செலுத்தி போதையை அனுபவித்தது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்