40 மாற்றுத்திறன் குடும்பத்துக்கு பட்டா
மேட்டூர், கொளத்துார் ஒன்றியம் காவேரிபுரம், நீதிபுரம், பண்ணவாடி, கண்ணாமூச்சி, குரும்பனுார், ஆலமரத்துப்பட்டி பகுதிகளை சேர்ந்த, 40 மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு, அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் முகாம், மேட்டூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் புரு ேஷாத்தமன், தாசில்தார் ரமேஷ் ஆகியோர், 40 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினர்.