உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., பிரமுகர் வீட்டில் 43 கிலோ புகையிலை பறிமுதல்

தி.மு.க., பிரமுகர் வீட்டில் 43 கிலோ புகையிலை பறிமுதல்

ஆத்துார், ஆத்துார் உணவு பாதுகாப்பு அலுவலர் ரத்தினம், டவுன் போலீசார் நேற்று, ஆத்துார், வ.உ.சி., நகர், பெரியார் நகரை சேர்ந்த, விஜயகுமார், 35, வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது கழிப்பறைக்குள், 4 மூட்டைகளில், 43 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்த புகையிலை பொருட்கள் இருந்தன. அதன் மதிப்பு, 50,000 ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், விஜயகுமார் மீது வழக்குப்பதிந்தனர். விசாரணையில், அவர், தி.மு.க., வார்டு பிரதிநிதி, உதயநிதி ரசிகர் மன்ற நகர செயலராக உள்ளதும் தெரிந்தது. தொடர்ந்து, அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை