உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அயோத்தியாப்பட்டணம் அருகே நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு

அயோத்தியாப்பட்டணம் அருகே நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு

அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் அருகே, நகைக்கடை உரிமையாளர் வீட்டில், 60 பவுன் தங்க நகை திருட்டுபோனது.சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே ராம்நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன், 45. இவர் அயோத்தியாப்பட்டணம் பகு-தியில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த, 12 இரவு குடும்பத்-துடன், கேரள மாநிலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்-றுள்ளார். பின் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு வீடு திரும்பி-யுள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோக்கள் உடைக்கப்பட்டு துணிகள் கலைந்து சிதறி கிடந்துள்ளது. பீரோவில் வைத்திருந்த, 60 பவுன் தங்க நகை, 5,000 ரூபாய் மர்ம நபர்களால் திருடப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஜனார்த்தனன் கொடுத்த புகார்படி, காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகை சேகரிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கண்காணிப்பு கேம-ராக்களை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை, காரிப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி