7 விநாயகர் சிலை கரைப்பு
கெங்கவல்லி: விநாயகர் சதுர்த்தியையொட்டி கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டியில், 7 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதனால் ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில், 60 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய வீதிகள் வழியே சென்ற பக்தர்கள், செந்தாரப்பட்டியில் உள்ள ஏரியில், சிலைகளை கரைத்தனர்.