உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 70 கிலோ புகையிலை, 50 கிலோ மாம்பழம் பறிமுதல்

70 கிலோ புகையிலை, 50 கிலோ மாம்பழம் பறிமுதல்

கொளத்துார் : சர்வதேச புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி மேட்டூர், கொளத்துார் உணவு பாதுகாப்பு அலுவலர் அன்புபழனி, சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர், வாரச்சந்தை, பஸ் ஸ்டாண்ட் சாலையோரம் நேற்று ஆய்வு செய்தனர். கொளத்துார் வாரச்சந்தையில் வேனில் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண், கார்பைட் பவுடர் பாக்கெட்களுடன் கூடிய மாம்பழங்களை விற்பனைக்கு வைத்திருந்தார். இதனால், 50 கிலோவில், 5,000 ரூபாய் மதிப்பிலான மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை அருகிலுள்ள குப்பையில் கொட்டினர். தொடர்ந்து கொளத்துார் பஸ் ஸ்டாண்ட் எதிரே ஆய்வு செய்தனர். அப்போது ஸ்ரீதர் என்பவர் கடையில் புகையிலை விற்பது தெரிந்தது. இதனால் அலுவலர்கள் கடையை பூட்டி சீல் வைத்தனர்.ரூ.50,000 அபராதம்அதேபோல் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியை சேர்ந்தவர் ஆஷிப், 40. அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். அங்கு கெங்கவல்லி வட்டார உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர் ராஜா உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, 70 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததால் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஆஷிப்புக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் மளிகை கடையையும் பூட்டிச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை