உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆத்துார் தொகுதியில் 848 ஓட்டுகள் நீக்கம்

ஆத்துார் தொகுதியில் 848 ஓட்டுகள் நீக்கம்

ஆத்துார், ஆத்துார் சட்டசபை தொகுதியில், 284 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அங்கு கடந்த, 4 முதல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த(எஸ்.ஐ.ஆர்.,) பணியில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடுகள் தோறும் சென்று படிவங்கள் வழங்கி, அப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரசியல் கட்சிகளின் பாக முகவர்களும் செல்கின்றனர். இதில் பைத்துார் ஊராட்சி வானபுரத்தில் உள்ள, 284வது ஓட்டுச்சாவடி; கல்லாநத்தம் ஊராட்சியில் உள்ள, 190வது ஓட்டுச்சாவடியில் பதிவேற்றம், இறப்பு, இடமாற்றம், இரட்டை பதிவு என, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் பதிவு செய்து, 100 சதவீத பணியை, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், நேற்று நிறைவு செய்தனர். அவர்களை, ஆத்துார் ஆர்.டி.ஓ., தமிழ்மணி பாராட்டினார்.தேர்தல் அலுவலர்கள் கூறுகையில், 'ஆத்துார் தொகுதியில், 2.45 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2.38 லட்சம் பேருக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது. 1.55 லட்சம் பேரிடம் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், 63.22 சதவீத பணி முடிந்துள்ளது. இறப்பு - 584, இடம் பெயர்ந்தவர் - 164, இரட்டை பதிவு - 74 உள்பட, 848 ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி