மேலும் செய்திகள்
பாலிடெக்னிக்கில் காதல்; ஜோடி போலீசில் தஞ்சம்
06-Nov-2024
டிபன் விலை உயர்வு அதிகாரிகள் ஆய்வு
16-Nov-2024
தாரமங்கலம்: வீடுகளில் பரிதவித்த, 9 பேரை, தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி, பத்திரமாக மீட்டனர்.கனமழையால் சேலம் மாவட்டம் தாரமங்கலம், அணைமேடு அருகே ஒடசக்கரை ஏரி நிரம்பி, கரை உடைந்து வெளியேறிய தண்ணீர், அப்பகுதியில் வெள்ளக்காடாக நேற்று முன்தினம் சூழ்ந்தது. இதனால் நடுமேட்டில் சாலையில் அரிப்பு ஏற்பட்டு, வீடுகளில் வசித்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.இதை அறிந்து, தாரமங்கலம் ஆர்.ஐ., சரிதா உள்ளிட்ட வருவாய்த்துறையினர், போலீசார், ஓமலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையில் வீரர்கள் சென்றனர். குடியிருப்பில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் உள்பட, 9 பேரை கயிறு கட்டி மீட்டனர். அதேபோல் வீடுகளில் உணவின்றி தவித்த, 20 பேர் உள்பட 55 பேருக்கு, வருவாய்த்துறையினர் உணவு ஏற்பாடு செய்து கொடுத்தனர்.இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், 'கருக்கல்வாடியை சேர்ந்த வெண்ணிலா, 24, சந்தோஷ், 30, கிருதேவா, 4, புகழ்செல்வன், 4, காசிராஜன், 50, ஆகியோர், நடுமேட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த நிலையில், அப்பகுதியில் மழைநீர் கரை புரண்டு சென்றதோடு சாலையில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் வெளியேற முடியாமல் தவித்தனர். இதை அறிந்து, அங்கு சென்று, அந்த, 5 பேர் மட்டுமின்றி, அங்கு வசித்த ரகுபதி குடும்பத்தினர், 4 பேர் என, 9 பேரை பத்திரமாக மீட்டோம்' என்றனர்.
06-Nov-2024
16-Nov-2024