உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கூட்ஸ் ரயில் மீது ஏறிய சிறுவன் படுகாயம்

கூட்ஸ் ரயில் மீது ஏறிய சிறுவன் படுகாயம்

சங்ககிரி : சேலம் மாவட்டம், சங்ககிரி ஆர்.எஸ்., பகுதியை சேர்ந்தவர் ஜெயகாந்தன் மகன் சீனிவாசன், 13, அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை விடுமுறை என்பதால், வீட்டிலிருந்து வெளியேறி, சங்ககிரி ரயில் நிலையம் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் டாங்க் சரக்கு ரயிலில் ஏணியில் விளையாட்டாக ஏறினார். அப்போது, மின்சாரம் தாக்கி, துாக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை