| ADDED : ஆக 22, 2024 03:50 AM
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி, நல்லதம்பி கவுண்டர் தெருவை சேர்ந்த ராஜா மகன் மவுலிராஜ், 5. நேற்று இரவு, 8:10 மணிக்கு வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையோரம் தள்ளுவண்டி கடையில் பானிபூரி பார்சல் வாங்கிய ராஜா, வீட்டுக்கு கொண்டு சென்று மகனுக்கு கொடுத்தார். சாப்பிட்ட சிறுவன் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயக்கம் வருவதாக தெரிவித்தார். உடனே பெற்றோர், வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'பானிபூரி கடையில் பலர் சாப்பிட்டுள்ளனர். சிறுவனுக்கு மட்டும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுவன் நல்ல நிலையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மருத்துவர்கள் தகவல்படி விசாரணை நடக்கும்' என்றனர்.