உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்த நாய்

தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்த நாய்

தாரமங்கலம்;தாரமங்கலம், துட்டம்பட்டி ஊராட்சி ஆட்டையான் வட்டம் நடுநிலை பள்ளி அருகே, ஒரு லட்சம் கொள்ளளவில் கீழ்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. அதன்மூலம் ஆட்டையான் வட்டம், கொடியன்வளவு, ஆரான்வளவு, கந்தாய் வட்டம் மக்களுக்கும், அங்குள்ள நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடிக்கும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. நேற்று காலை, குடிநீர் வியோகிக்க அதன் ஆப்பரேட்டர் வந்தார். அப்போது தொட்டியில் இறந்த நிலையில் குட்டி நாய் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே தாரமங்கலம் போலீசார் வந்து, தொட்டியில் இருந்த நாயை அகற்றினர். பின் தண்ணீர் முழுதும் வெளியேற்றி சுத்தப்படுத்த அறிவுறுத்தினர். தொட்டியில் நாய் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை