மேலும் செய்திகள்
சரக்கு வாகனம் கவிழ்ந்து 11 தொழிலாளி படுகாயம்
09-Oct-2025
பெத்தநாயக்கன்பாளைய:பெத்தநாயக்கன்பாளையம் அருகே, மது போதையில் இருந்த வாலிபர், யாசகரின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த வெள்ளாளப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி, 65. இவர், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் பகுதியில், யாசகம் எடுத்து வாழ்ந்து வந்தார். நேற்று காலை, 7:00 மணியளவில் அவரது வீட்டில் உடலில் காயங்களுடன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அப்பகுதியினர் ஏத்தாப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பெரியசாமி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். இதுகுறித்து, பெரியசாமி சகோதரர் முருகன், 66, கொடுத்த புகார்படி விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், 'வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் கொத்தனார் பெரியசாமி, 19. இவர் மதுரை வீரன் கோவில் அருகே மது போதையில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு அமர்ந்திருந்தார். அவ்வழியாக சென்ற பெரியசாமியை தகாத வார்த்தையால் திட்டினார். இது குறித்து அவர் கேட்டபோது, மதுபோதையில் இருந்த கொத்தனார் பெரியசாமி, அவரது செருப்பை அங்கேயே விட்டு ஓடியுள்ளார். அப்போது, செருப்பை எடுத்து முதியவர் பெரியசாமி வீசியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கொத்தனார் பெரியசாமி, முதியவர் பெரியசாமி வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டு, துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்து, அங்கிருந்து தப்பியுள்ளார்' என்றனர்.
09-Oct-2025