உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப்பெற வாகன ஊர்வலம்

தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப்பெற வாகன ஊர்வலம்

சேலம்: மத்திய அரசு, தொழிலாளர் விரோத, 4 தொகுப்பு சட்டத்தை திரும்ப பெறவும், மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், மத்-திய தொழிற்சங்கங்கள் சார்பில், சேலத்தில் மோட்டார் சைக்கிள் பிரசார இயக்க ஊர்வலம் நேற்று நடந்தது. சி.ஐ.டி.யு., சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் தியாகராஜன் தொடங்கி வைத்தார். பால் மார்க்கெட் பகுதியில் தொடங்கிய ஊர்வலம், பழைய பஸ் ஸ்டாண்ட், தாதகாப்பட்டி வழியே சீலநா-யக்கன்பட்டியில் நிறைவடைந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட நிர்வாகி வைரமணி, தொ.மு.ச., சார்பில் பழனியப்பன், ெஹச்.எம்.எஸ்., கணேசன், ஏ.ஐ.டி.யு.சி., முனுசாமி, ஐ.என்.டி.யு.சி., நடராஜன், ஏ.ஐ.யு.டி.சி., மோகன் உள்ளிட்ட நிர்-வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை