உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆவின் பால் தர பரிசோதனை ஐ.எஸ்.ஐ., முறைக்கு கோரிக்கை

ஆவின் பால் தர பரிசோதனை ஐ.எஸ்.ஐ., முறைக்கு கோரிக்கை

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க மாநில செயற்குழு கூட்டத்தில், கொள்முதல் பாலின் தர பரிசோதனைக்கு, ஐ.எஸ்.ஐ., முறையை கையாள வேண்டும். தமிழகம் முழுதும் ஆவின் நுகர்வோரிடம், மாத முன் கட்டணம் பெற்று, சலுகை விலையில் பால் அட்டை வழங்குவதை நடைமுறைப்படுத்த வேண்டும்.மத்திய, மாநில அரசுகள் நிதியுதவியில், பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு, முற்றிலும் இலவச கால்நடை காப்பீடு திட்டத்தை செயல்படுத்தல்; ஆவின் பால் ஒன்றியம், தொகுப்பு பால் மையங்களில் அரசு மானியத்தில் சோலார் மின்வசதி திட்டத்தை செயல்படுத்தி, சங்க மின் கட்டண செலவை குறைக்க வேண்டும். ஆவின் பால், அதன் பொருட்கள் விற்பனையில் ஆமை வேகத்தில் செயல்படும் விற்பனை பிரிவு அதிகாரிகளுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் இலக்கு நிர்ணயித்து, கொள்முதலை அதிகப்படுத்தல் வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி