உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு கலைக்கல்லுாரியில் கவுன்சிலிங் நேற்று 236 மாணவர்கள் சேர்க்கை

அரசு கலைக்கல்லுாரியில் கவுன்சிலிங் நேற்று 236 மாணவர்கள் சேர்க்கை

சேலம்: சேலம் அரசு கலைக்கல்லுாரியில், நேற்று நடந்த மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், 236 பேர் சேர்க்கப்பட்டனர்.சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள, அரசு இருபாலர் கலைக்கல்லுாரியில் இளநிலை மாணவர்களுக்கான முதல்கட்ட பொது கவுன்சலிங் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று ஆன்லைனில் விண்ணப்பித்திருந்த அறிவியல் பாட பிரிவுகளுக்கு, மாணவர் சேர்க்கை நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது சான்றிதழ்களுடன் பங்கேற்றனர்.அவை சரி பார்க்கப்பட்டு, விருப்ப பாட பிரிவுகளில், 236 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டனர். இன்று இரண்டாம் நாளாக, கலை, வணிகவியல் மற்றும் மொழிப்பாட பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.சேலம் கோரிமேட்டில் உள்ள, அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், நேற்று இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கியது. அறிவியல் பாட பிரிவு மாணவியருக்கான சேர்க்கையில் நேற்று, 159 பேர் சேர்க்கப்பட்டனர். இரு கல்லுாரிகளிலும், 70 சதவீதத்துக்கும் அதிக சீட்கள் நிரம்பியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்