உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அசைவம், கேக் அதிகமாக சாப்பிட்ட வாலிபர் பலி

அசைவம், கேக் அதிகமாக சாப்பிட்ட வாலிபர் பலி

சேலம்,:சேலம், தாதகாப்பட்டி புருேஷாத்தமன் மகன் நந்தகுமார், 23. இவர் விபத்தில் சிக்கியதால், வயிற்று பகுதியில் ஆப்பரேஷன் செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் பிரச்னை இருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம், ஆங்கில புத்தாண்டு அன்று, வீட்டில் ஆட்டுக்கறி, பிராய்லர் கோழிக்கறி சமைத்துள்ளனர். அதை அதிகளவில் சாப்பிட்டார். அத்துடன் கேக்கும் சாப்பிட்டு, இரவு, 9:00 மணிக்கு படுக்கை அறைக்கு சென்றார்.மீதமிருந்த கேக்கையும் படுத்துக் கொண்டே சாப்பிட்டவர் துாங்கி விட்டார். நள்ளிரவு, 12:30 மணிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு துாக்கி வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ