உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அ.தி.மு.க., - அ.ம.மு.க., நிர்வாகிகள் மோதல்

அ.தி.மு.க., - அ.ம.மு.க., நிர்வாகிகள் மோதல்

சேலம், அ.தி.மு.க.,வின், சேலம், சூரமங்கலம் பகுதி செயலர் மாரியப்பன், 55. இவர் நேற்று முன்தினம், பள்ளப்பட்டி தொடக்க வேளாண் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த, அ.ம.மு.க., வட்ட செயலர் விஜயகுமார், அங்குள்ள மாரியம்மன் கோவில் தொடர்பான பிரச்னை குறித்து, மாரியப்பனிடம் கேட்டார். அதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். மக்கள், அவர்களை விலக்கி விட்டனர். பின் விஜயகுமார் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை